விடுதலை

வெள்ளையன்
மீதம் விட்டு சென்ற
விடுதலை

வீரம் கொண்டு வென்ற
விடுதலை
விடுமுறை தந்து உதவும்
நாளாக

போராடி பெற்ற
விடுதலை
புது படங்கள் பார்க்க விட்ட
நாளாக

குமரன் காத்த
கொடி
கட்சிகள் கட்டி மிட்டாய் தரும்
நாளாக

பலகோடி பேர் பாடுபட்டு பெற்ற
விடுதலை
பட்டிமன்றங்கள் போட பயன்படும்
நாளாக

குடிமகன் போற்றும்
விடுதலை
குடியை போற்றும் மகன்
வருந்தும்
நாளாக

செந்நீர் உதிர்த்து பெற்ற
விடுதலை
சுத்தம் சீர்கெட்ட
நாளாக

சட்டங்கள் வகுத்த ஜனநாயகம் தந்த
விடுதலை
சட்ட ஒழுங்கை கையூட்டி விற்கும்
நாளாக

முடிசூடி மன்னர்கள் ஆண்ட
பாரதம்
வெள்ளை வேட்டி கட்டி ஆளும்
நாளாக

விளைநிலம் செழிக்க பெற்ற
விடுதலை
விலைநிலமாய் தொலைத்துவிட்ட
நாளாக



வார்த்தைகளில் இல்லை வல்லரசு
வாழ்க்கை லட்சியம் அல்லவா

சொல்லில் இல்லை சுத்தம்
செயலில் அல்லவா

வகுப்பதில் பயன் இல்லை-சட்டம்
வாழும் ஒழுங்கில்

விடுதலையை விதைத்து பயன் என்ன
அறுபது ஆண்டுகள் கடந்தும் அறுவடை இல்லை

"இந்தியன்"
என்ற சொல்
18மொழிகளை பேச
29மாநிலங்கள் ஆள
கோடான கோடி
மக்களின் அடையாளமாக....

சாதிகள் கொண்டு பிரிக்கவும்
கழிவுகள் கொண்டு அழிக்கவும்
சட்டம் மீறி சிதைக்கவும்
கட்சி கட்டி கெடுக்கவும்
அல்ல

இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில்
இல்லை சுதந்திரம்
இந்தியனாய் வாழ்ந்து வாழ வைப்பதில்

சுதந்திர தின வாழ்த்துகள்...

என்றும் அன்புடன்
மோனிஷா

எழுதியவர் : Monisha (15-Aug-15, 11:32 am)
Tanglish : viduthalai
பார்வை : 120

மேலே