எதை நோக்கி போகிறது சுதந்திரம்

நெஞ்சி பொறுக்கலயே
பஞ்சமா பாதகர்கள் செயல்
கண்டு.
உள்ளம் ஊனம் ஆன
கள்வர்களோ இல்லை
கடமையைக் கண்ணும்
கருத்துமாகப் பார்க்கும்
காவலர்களோ.
பாதம் பதித்து நடக்க
வழியில்லா வாளிபனை
தன் பாதத்தாலே
கொட்டுகிறான .
சட்டமோ போடுகிறது
பல விதத்தில் ஆட்டம்.
இது என்ன புதுக் கூட்டம்.
மட்டம் தட்டுகிறது
காவலர்களை பல
மாவட்டம்.
நல்ல சில அதிகாரிகள்
தன்னுள்ளே குமுறுகிறான்
இது என்ன பிழைப்பு என்று.
இதில் எங்கே சுதந்திரம் .
மதுவுக்கு தடை விபச்சாரத்துக்கு தடை
மழலைக் கொலை தடை கற்பழிப்பு தடை
லஞ்சம் தடை இத்தனையும் தடை இன்றி
போடுகிறது நடை.
அங்கே அதிகாரம் நுழையத்தான் தடை.
உடலால் வருந்தி உள்ளத்தால் துடிக்கும்
ஒருவனுக்கு ஒத்தனம் கொடுக்கிறதா
சட்டம் உபத்திரம் கொடுக்கிறதா.
அரசாங்கத்தின் அராஜகம்
அரங்கேறுகின்றது நடு வீதியிலே
எங்கு இல்லை எதில் இல்லை
சுதந்திரம் என்னும் வார்த்தை.
அவை சோர்ந்து போகின்றது
அரச தந்திரங்களால்.
ரத்தத்தின் ரத்தமென மேடைக்கு
மேடை பேச்சி.
மொத்தத்தில் மொழியால் பிரித்து
தமிழனுக்கு எதிலும் வழி
இல்லாது போச்சி
முன்னேற்றுவேன் முன்னேற்றுவேன் நாட்டை
என்பது அரசியலின் தாரகை மந்திரம்
விலை ஏற்றி விலை ஏற்றியே
வீனாகப் போகிறது கூழிகளின்
அன்றாட வாழ்வு மாத்திரம்.
சுதந்திரம் இல்லை அதை நாடி
ஓடுவோருக்கு சோறும் இல்லை.
எதை நாடிப் போகின்றதோ இந்தச்
சுதந்திரம் என்னும் சொல்.
எங்கும் ஊழல் அரச காரியாலயத்தில்
நுழைந்ததுமே தேடல் உருப்படியாக
ஒரு காரியம் துட்டு இன்றி செய்ய
வழி உண்டா.
பக்கத்துக்குப் பக்கம் பொதுச் சேவை
என்று அறிவிப்பு பலகை.
அங்கே பொத்திய வண்ணம் அபகரிக்கான்
ஏழையின் கை இருப்பை.
இதில் மனிதனுக்கு எங்கே சுதந்திரம்.
பாதைக்குப் பாதை மதுக் கடை நடை பாதையிலே
நடக்கவே மாதுக்கு தடை.
போதையில் தள்ளாடும் கயவர்கள்
தாவணி தொட்டு இழுப்பான் என
அச்சம் இதில் பெண்ணுக்கு எங்கே
சுதந்திரம் .
நினைத்த நேரத்தில் பாதையில் நடக்கத் தடை
நினைத்த படி வாழ சமூதாயத்தில் தடை
சுதந்திரம் என்னும் வார்த்தை சொல் அளவுதான்
அவை பறந்து விட்டது பல விதத்திலும்
சில மதத்திலும்.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (15-Aug-15, 9:47 pm)
பார்வை : 119

மேலே