இரண்டாம் சுதந்திரப் போர்

சுதந்திரம் இருக்கிறதாய்,
சுகமாய் ஒதுங்கிடாதே இந்தியனே.
சும்மா கிடைக்கவில்லை அது - சொன்னால்,
சுமை கொள்ளும் நம் மனது.

நாடு காக்க நமக்கு,
இப்போது தேவை -
இரண்டாம் சுதந்திரப் போர்.

அநாகரீக அரசியல்,
அச்சம் தரும் தீவிரவாதம்,
சட்டென மதம் கொள்ளும் மதம்,
சத்தியத்தின் வேரறுக்கும் லஞ்சம்,

வன்முறையின் வெறி யாட்டம்,
வகைவகையாய் குற்றங்கள்,
கட்டுக்கடங்கா மக்கள் தொகை,
கல்வியில்லா குழந்தைகள்,

நேர்மையற்ற நெறிமுறைகள்,
மனிதமில்லா மனிதர்கள்,
பெண்களை போற்றாமை,
பெரிய மனம் பேணாமை,

மதுவின் அரக்கத் தனம்,
மடமையின் உச்ச நிலை,
இயற்கையை சாகடித்தல்,
இறைவனையும் நோகடித்தல்.

இத்தனை இடர்களில் இருந்தும்,
உன் நாட்டை காக்க நீ,
உணர்ச்சியாய் உருவாகு,
இன்னொரு சுதந்திர போருக்கு.

உன்னிலிருந்து ஆரம்பித்து,
ஊரையும் நீ திருத்தாவிட்டால்,
மற்றொரு சுதந்திர தாகம்,
உனக்கு வாராவிட்டால்,

புதைக்குழியில் விழுந்த,
புள்ளிமானைப் போலே,
அழிவாகிப் போகும் - நமது
அருமை மிகு அன்னைபூமி.

தாய் அழியப் பார்த்திருக்கும்
பிள்ளைகளோ நாம்.
விரைந்து வந்து தீமைகளை
வெற்றி கொள்வோம்.

எழுதியவர் : செந்ஜென் (16-Aug-15, 12:23 am)
சேர்த்தது : செந்ஜென்
பார்வை : 230

மேலே