விரிசல்கள் தந்த காயங்கள்__ அரவிந்த்

என்னுள் மிச்சம் ஏதுமில்லையடி,
என்னுளே உன் நினைவே
மிச்சமடி...

என்னுள்ளம் எங்கும்
காய சுவடுகளின்
எச்சமடி..

அக்னி நட்சத்திரத்தில்
என் கண்ணீர் துளிகளும்
காய்ந்து போனதடி..

என் உள்ளம்
வறண்ட பாலைவனம்
ஆனதடி..

வேடமிட்டு கூத்து காட்டும்
கோமாளி
ஆனேனடி..

சிரித்து சிரித்து
மறைக்கப்பார்த்தேன்
என்னுள் நான் சிந்தும்
கண்ணீரையடி..

என் செங்குருதி எல்லாம்
உப்பாய் ஆனதடி..

என் ரத்தநாளங்களெல்லாம்
நீ தந்த ரணங்களை
ரசிக்குதடி..

என் உள்ளம் எனும்
உடைந்த கண்ணாடி
ஒட்ட வைக்க முடியலடி..

உடைந்த பாகங்களின் கீறல்கள்
ரணங்களை தந்திட
ரசித்திட தோன்றுதடி..

அகம் அழுது
புறம் சிரிக்கும்
நவரச நடிகன் நானடி..

என் விதி எழுதிடும் போது
பிரம்மனுக்கும் இரக்கம்
இல்லையடி..

தனிமையை பழகி கொள்ள
நினைத்தேன் என்
உள்ளமும் என்னை
பழிவாங்க துடிக்குதடி..

எழுதியவர் : அரவிந்த் (16-Aug-15, 11:17 am)
பார்வை : 100

மேலே