என் உள்ளத்தின் நிலவு

..."" என் உள்ளத்தின் நிலவு ""...
என் வீட்டு தேவதையிவள்
என் தேவைகள் அறிந்தவள்
சேவை செய்தே மகிழ்பவள்
என்னுயிருடன் சேர்ந்தவள் !!!
வரும்வரையில் காத்திருப்பாள்
வாசப்படியோடு பூத்திருப்பாள்
கனவுகளை சுமந்திருப்பாள்
தாமதித்திட வாடினிற்ப்பாள் !!!
பசித்துவிட உண்ணென்றால்
பசியாற்றி பார்த்திருப்பாள்
ஒரு கவளம் ஊட்டிவிட்டால்
மாரோடே சாய்ந்திடுவாள் !!!
பிள்ளைக்கு அன்னையவள்
என் கைகளிலே துள்ளுபவள்
நான் அள்ளிவிட அஞ்சுபவள்
கொஞ்சிவிடால் மிஞ்சுபவள் !!!
வர்ணனைக்கும் அகப்படாத
வார்த்தைக்குள்ளும் அடங்காத
என்னுள்ளத்தின் நிலவவள் என்
நித்திரையிலும் கனவவள் !!!
விழியோடு விழி துளைத்து
உயிரெடுத்து உயிர்கொடுக்கும்
கலைதனையரிந்த கைகாரி
நானுமப்படித்தான் அவளுக்கு !!!
என்றும் அவள் அன்புடம் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...