கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்
உள்ளத்தின் நாடி நாளங்களை குருதியால்
விரல் எடுத்து காகிதத்தில் சுவை மாறாமல் செதுக்கும்
சித்திரம் தான் கவிதை
ஆழமான பாடுபொருளில் கவிதை அமைந்தால்
படைப்பாளியின் வித்தகம்,எதுகை மோனை உவமையணி
என்று சொல்லாடல் மலர்ந்தால் வாசகனுக்கு கிடைக்கும் முத்தங்கள்
அருவியில் பாயும் சத்தம் வெண்பவாவிலுள்
அடக்கி விட முடியாத உயிரோட்டமான கவிதை
சாலையில் மிறிபடும் கல்லை ஆயுதமாக கொண்டு
அடித்தால் போராளியின் கவிதை.பணத்துக்காய்
மனிதம் வயிற்றில் அடிக்கும் போது உரிமைக்காய்
மக்கள் எழுந்து நின்றால் உரிமையின் கவிதை
ஏழைக்கு போடும் சில்லறைச் சத்தம் காய்ந்த
வயிற்றில் விழுகின்ற உணவின் கவிதை.அதிகாரத்தால்
கை நீட்டி வாங்கும் மானியம் பிச்சைக்குள் அடங்காத
புதுக்கவிதை.கள்ளம் நிறைந்த ஆட்சியாளர்களின்
வாயில் எழுகின்ற வாக்குறுதிகள் கானல் காணும் கவிதை
காதல் மலரும் பருவ பக்கங்கள் காகிதப் பெண்களின் கவிதை
ஆலமரத்தில் காற்றாய் வந்து தேகத்தில் குத்தும் அரும்பு
மீசைகள் வாலிபக்காரனின் கவிதை வானம் எழுதும் மேக
எழுத்துக்கள் கிருக்குவபவனுக்கு ஓவியக்கவிதை படிப்பவனுக்கு
காவியக்கவிதை
பெண்ணின் கண்ணீரை போல் விண்ணுக்கும் கண்ணீர் விழி துடைக்கும்
ஏழு வில் போல பெண்ணுக்கும் ஏழ் வகை பருவங்கள் கவிதை
ஒட்டடை படிந்த வீட்டில் இலை உதிர்ந்த மரங்கள் திருடனுக்கு
எச்சரிக்கை புகுத்தும் இயற்கையின் கவிதை
ஆயிரம் கண்கள் ஒருவனை பார்த்து சிரிப்பதால் அவன் மூடனும்
இல்லை.கவிக்காரனின் சமையலை பலர் சுவைக்காமல் விடுவதால்
அவன் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டவனுமாக முடியாது
உயிர் பிறக்கும் போது பத்து திங்கள் தாய் உயிரை அணுயனுவாய்
தியாகம் செய்வதைப் போல் எழுத்துக்களும் நேசம் கொண்டவனை
சோதிக்கும் அவை அவனுக்கு கிடைக்கும் மகுடங்கள்
கவிதை என்பது வெறும் வார்த்தைகள் என்றால் கவிஞன்
என்பவன் காகிதத்துக்கு உயிர் கொடுக்கும் சுவாசம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
