சொந்தமில்லை
கன்றின் கண்ணில்
கண்ணீர் கதைக்க
திண்ணை எங்கும்
தன தாயை வதைக்க
பால் சுரக்க மடி தடவி
விட்ட மகன் பெரும் பாவி
இப்போ இயந்திரம் கண்டு
பாவங்களை சேர்ப்பதேனோ
தாய் மார்பை பிளிந்து
அவள் முளைக்கண்ணை கிழித்து
அதில் சொட்டுகின்ற திரவங்கள்
இந்த மானிடத்தின் அவலங்கள்
பசுமாடும் தாய்ப்போல
பின் ஏனிந்த கொடூரகொலை
உரிமைக் கொண்டு கொடுக்கும் வரை
இதில் யார் பாலும் சொந்தமில்லை ..