மெல்ல தோன்றும் மாற்றங்கள்

நீயும் நானும்
பேசிப்பேசி களைப்படைந்ததில்லை
பேச முடியாததாலேயே
களைப்படைகிறோம்...

சில நேரம் தூரத்தில்
உன் வார்த்தைகள் விடுபட்டு
என்னை வந்தடையும் போது
மெல்ல கன்னம் வருடுகிறது ...

எப்போதும் உன்னிடம் வாதிட
கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிக
இனிமையானவை.. முடிவில்
எனக்கே விட்டுதந்துவிடுவாயே...

மெல்ல தோன்றும் மாற்றங்கள்
நமக்குள் என்ன விளைவை
ஏற்படுத்துமோ... இருந்தும்
தொடர்கிறோம் .. மகிழ்ச்சியுடனே....

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (21-Aug-15, 3:15 pm)
பார்வை : 499

மேலே