பெண்ணெனும் ஜீவ நதி …..
பணத்தை
எறிந்துவிட்டுப்
முகத்தை மறைத்துக்கொண்டுபோனார்
கெளரவமானவர்போல...
களைந்திருந்த ஆடைகளை
சரிசெய்துகொண்டாள்...
பள்ளியிலிருந்து
பசியோடு வரும்
குழந்தைக்காக
பானையில் அரிசி
வெந்துகொண்டிருந்தது
”ஒருமாதிரிப்பெண்”
என்று
ஊர்சொல்லிக்கொண்டது
“வேறுமாதிரி”
இதுவரைக்கும்......
ஆண்களை
அவளுமே
பார்க்கவில்லை......
ஏமாற்றியவர்களை
காசு மறைத்தது..
ஏமாந்தவளையோ
வேசியென முறைத்தது...
சோற்றுக்கஞ்சி
பொங்குகிறது...
இறக்கிவைக்க
கரித்துணியை
தேடுகிறாள்....
ஜீவ நதிகளுக்கு களங்கமில்லை... !!!