விவசாயி

பொட்டல் காடு பூமியிலே
பொறந்தோம் எல்லாம் ஏழைகளே
மழையின்றி மலடான பூமியிலே
விதைகளாய் வீழ்கிறது பிணங்களே

வானம் கண் திறக்கவில்லை
அரசும் கவனம் செலுத்தவில்லை

ஒரு கை கண்ணத்தில்
மறு கை அடிவயிற்றில்
வலியும் வயிற்று பசியும்
தானே ஏழைகளின் வாழ்க்கை

காசு என்பதே கனவு
தண்ணீர் தானே எங்கள்
உணவு அதற்கும் தேவை
பத்து ரூபாய் செலவு

அடுப்பு இல்லை அரிசியுமில்லை
வெற்றாய் இயக்கி பார்த்திட
மின்சாரம் கூட இல்லை
விலையில்லா மிக்ஸி கிரைண்டர்
வாங்கியொரு பயனும் இல்லை

குடிசை வீடுகளை கோபுரமாகுமாக்கியதில்
பெருமை பேசும் அரசாங்கமே
குடிசையாகுமா வெட்டவெளி வீடு
குடிசை கூடாரமில்லா ஏழைகளுக்கு

அகிம்சையை போதிக்கின்றனர் அராஜகக்காரர்கள்
உரிமையை பற்றி பேசுகையில்
உடமையை பறித்து செல்கிறார்கள்

அதிகாரத்தை உனக்கு தந்து
அடக்குமுறை நாங்கள் பெற்றது

மீளாத துயரம் வேண்டும் என்கிறது
மீண்டும் ஓர் சுதந்திரம்

எடுக்கப் போவது யாரோ
கையில் இயந்திரம் ?

(செந்தில்குமார் ஜெயக்கொடி)

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 2:05 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 138

மேலே