மனிதர்

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- மகாகவி சுப்பிரமணிய பாரதி.

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். -இங்கர்சால்

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். - சாக்ரடிஸ்

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! -அம்பேத்கர்

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்! -பெரியார்

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (27-Aug-15, 3:35 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : MANITHAR
பார்வை : 140

மேலே