இடைவெளியுடன் தொடர்ந்தால் என்ன
எதிர்பார்ப்புகளுடன் வந்த புது உறவுக்காக....
எதையும் எதிர்பார்க்காத நம் நட்பு,
இடைவெளியுடன் தொடர்ந்தால் என்ன...
நிலவும் மேகமும்,
உண்மையில் வெகு தூரம் விலகி இருந்தாலும்..,
இம்மானிடர் கூட்டம்,
மேகத்தினுள் மறைந்ததாய் எண்ணி, நிலவை தேடும்...
காரணம் தேடி திரியும் கயவர்களுக்கு,
அதை நாம் கண்டெடுத்து கொடுக்காமல்...
இடைவெளியுடன் இணைதிருப்போம்....
புறம்பேசும் புதியவர்களின் எண்ணத்தில்,
நம் நட்பின் புனிதத்தை பதிக்காவிட்டாலும் பரவாயில்லை...
மனை துணையின் மனதில்,
நம் நட்பு மங்காத மாணிக்கமாய் திகழ,
இடைவெளியுடன் தொடர்ந்தால் என்ன...