என் உயிர்த்தோழி
![](https://eluthu.com/images/loading.gif)
எந்தவொரு கோட்பாடுகளும்,
வரையறையும்,
கட்டுப்பாடும் இன்றி
நண்பர்களாய் பழகி வந்தோம் தோழி.
திரும்பக் கிடைக்குமா?
அந்த கனாக் காணும் காலங்கள்!
கல்லூரிக் காலத்தின் போது
காதலும் காமமுமின்றி
ஒன்றாய் படுத்துறங்கிய போதும்,
கலங்கமில்லா நம் நட்பை
குறை சொல்வோர்
எவரும் இல்லை.
ஆனால் இன்று
திருமணமான உன்னுடன்
திருமணமான நான்,
உனக்கு நட்பு ரீதியாக
வணக்கம் பணிந்தாலும்
அதை சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்
உன் பதியும் என் பத்தினியும்.
இதற்கு என்ன தான் தீர்வு?
இவர்களுக்கு பயந்து
நம் உறவை முடித்துக்கொள்ள
நாம் ஒன்றும்
கள்ளக்காதலர்கள் இல்லை.
உயிர்மூச்சு உள்ள வரை
உயிருக்கு உயிராக இருக்கும்
நண்பர்கள்...!