நட்பு திமு திபி
நட்பிற்கு!!
பேதமில்லை..
வயதில்லை..
கால நேரம் இல்லை..
உயர்திணை அக்றிணை என்றில்லை...
பாலின பாகுபாடில்லை..
வரையறுக்க முடியா அற்புத அனுபவம் நம் முன்னோர்!! இன்னோர்!! கொண்ட நட்பு!!
புனிதமான!! தனித்துவமான!! பாகுபாடின்றி அனைவராலும் கைபற்றகூடிய ..
அன்பினால் மட்டுமே வாழக்கூடிய! அழிவற்ற பொருள் எதுவெனில்.. அது " நட்பு " மட்டுமே அன்றோ என் தோழா!!
ஒளவைக்கும் அதியமானுக்கும் இருந்த நட்பு!
- வயதேது
துரியனுக்கும் சூர்ய புத்திரனுக்கும் ஊடான நட்பு!
- பேதமேது
மாயவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே பூத்த நட்பு!
- கால நேரமேது...
இதிகாசத்தில் மட்டுமா நட்பு!?இன்றளவும் நட்பென்பது கற்புநெறி தவறியதில்லை.. !!!
நட்பென்பது பகடையா? பாலினம் பார்த்துருட்டி காய் நகர்த்த..
நட்பென்பது படிக்கட்டா? காதலுக்கு முன்னும் பின்னும் அவரவர் இஷ்டத்துக்கு வைத்து விளையாட..
நட்பென்பது காலக்கோடா? திருமணத்திற்கு முன் பின் என எல்லைகள் வகுக்க..
உற்ற துணையுடன் ஆத்மார்த்த பந்தம் இருப்பின்..
சுற்றாரின் விசப்பர்வையின் வீரியத்தை முறியடிக்கும் மனபக்குவம் பெற்றிருப்பின்..
மூன்று கால்களில் நடக்கும் மூதாட்டி ஆன பின்னும் நட்பின் துணை கொண்டு நடைபோடலாம் உன் பதியுடன் கை கோர்த்து..