தோழியின் பந்தம்

என்னவள் எனக்கானவள் என்று அறிமுக படுத்திய போது.
அவள் அன்னையானால்.
காலத்தினால் நான் செய்த சிறு தவறுகளால்,
அவள் கண்டிப்பான தந்தை யானால்..
அவள் பாசத்தினால் பலமுறை
எனக்கான சகோதரியானால்..

என் வாழ்கை இருளாகிற போதெல்லாம்
எனக்கான மெழுகுவர்த்தி அவள்.
நான் துவண்டு போகும் போது
நான் சாய்ந்து கொள்ளும் தோள் அவள்.

தாய், தந்தை, தாரம்,தம்பி, தங்கைகளின்
உறவகளிளில் அதிசயமும் இல்லை,
ஆச்சர்யம் இல்லை..அவைகளில் என் இரத்தம்
கலந்திருக்கிறது..

அனால் நாம் இருவரிடையே கலந்திருக்கும்
இந்த ஆன்ம பந்தத்திற்கு.. இனி ஒரு ஜென்மம் வேண்டி
கதறுவேன் கடவுளின் கால்களை பற்றி..

எழுதியவர் : கணேச மூர்த்தி (29-Aug-15, 3:26 pm)
Tanglish : THOZHIYIN pantham
பார்வை : 3281

மேலே