பிறந்ததும் இறந்தேன்

இருபவர்கள் எல்லாம் இறப்பதற்கு நினைக்கையிலே..
உன் பிறப்பை எப்படி இன்பமென கருதுவேன் என்மகனே.
கருவில் அழிந்திருதால் களிப்பாய் இருந்திருப்பேன்.
இப்படி ஒரு சூழ்நிலையில் இங்கு வந்து பிறந்ததற்கு.

என்னையும் அறியாமல் எரும்பையும் மிதித்திடுவேனோ..
என எண்ணுகிற என்னையும் இரும்பு இதயமக்கிய
இந்த கொடுமைக்கு யார் பொறுப்பு.

இந்த ஈனங்கெட்ட சாதி வெறியர்களுக்கு மத்தியில்
வாழ விரும்பாமல் இனி ஒரு வரம் வாங்கி வருவோம்..
இப்போது போவம் மூவரும்..அந்த எமனிடம் நீதி கேட்க..

எழுதியவர் : கணேச மூர்த்தி (29-Aug-15, 5:50 pm)
பார்வை : 73

மேலே