துதிப்போர்க்கு இரங்குபவன் ஐயப்பன்
துதிப்போர்க்கு இரங்குபவன் ஐயப்பன் ராகம்: பீம்பிளாஸ்
பல்லவி
துதிப்போர்க்கு இரங்குபவன் ஐயப்பன்
தூய்மையுடன் உள்ளம் உருகி நெகிழ்வோர்க்கு;
(துதிப்போர்க்கு)
அனுபல்லவி
மதிப்பவர் மனத்துள்ள மாசினை மடிப்பவர்
கொதிப்பவர் மனத்துள்ள கோபத்தை தணிப்பவர்;
(துதிப்போர்க்கு)
சரணம்
குன்றுதோறாடும் குமரனுக்கு இளையவன்,
கூறும் அடியவரின் குறைகளை தீர்ப்பவன்,
சபரிகிரீசா சரணம் ஐயப்பா,
சரணம் ஐயப்பா சரணம் பொன்ஐயப்பா,
சாமியே சரணம்.
(துதிப்போர்க்கு)