பேசு
உண்மை பேசு
உரக்க பேசு
சிரிக்க பேசு
சிறப்பாய் பேசு
மறக்க பேசு
பிறர் மெய் மறக்க பேசு
நன்றே பேசு
நன்றாய் பேசு
உள்ளதை பேசு
உயர்வாய் பேசு
தெளிவாய் பேசு
சிந்திக்க பேசு
கனிவாய் பேசு
மனம் கவர பேசு
பேசு பேசு பேசு
பேச்சே உன் உயிர் முச்சை இருக்கட்டும்
- கோவை உதயன்