நாளயும் நமதே

குடும்பம் என்று வந்து விட்டால்
ஒருவருக்கொருவர் ராஜாவும் மந்திரியும் போல்
குடும்பத்தை கட்டிக் காப்பதில்
ஆலோசனை வழங்குவதில் அறிவுரை கூறுவதில்
துணை நிற்க வேண்டும்
விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்

ஆண் மனதோ விசாலமானது
அவனைக் குறுகிய வட்டத்திற்குள்
வாழ சொல்வது முட்டாள் தனம்
அன்புடன் வாழவேண்டும்
குடும்பத்தைப் பேணிக்காக்க வேண்டும்
அத்துடன் ஊர் போற்றவும் வாழ வேண்டும்
அதுவே ஆண்மகனுக்கு அழகு மதிப்பு

இருவரும் ஒருவருக்கொருவர்
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
நன்மைகளோ ஏராளம்
குடும்பம் ஒற்றுமையாக வாழும்
ஆண்கள் வீட்டுக்குள் பதுங்கி விட்டால்
நாட்டை காப்பது யார்/ நல்லது செய்வது யார் /
நல்ல விசயங்களில் ஆண்கள் தலையிடும் போது
பெண்களும் துணையாக வேண்டும் அப்போதுதான்
நன்மைகள் உருவாகும் நாடு நலம் பெறும்

நாகரீக உலகத்தில் நாளும் முன்னேற
ஆண்கள் பெண்கள் இருவரும்
வாழ்க்கை எனும் களத்தினில்
இயன்றவரை போராட வேண்டும்
ஒரு கை தட்டினால் ஓசை இல்லை
ஆண்களும் பெண்களும் நாட்டின் கண்கள்
நாடும் நமதே மக்களும் நமதே
நாளையும் நமதே நம்பிக்கைகளும் நமதே

எழுதியவர் : பாத்திமா மலர் (1-Sep-15, 5:43 pm)
பார்வை : 140

மேலே