இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பாஸ்
சின்னப் புள்ளையா இருக்கறப்ப திருவிழாவுக்குப் போயி அன்னிக்கு ராத்திரி கரகாட்டத்துக்கு மச்சான் கூட இருந்தா கூடவே விளக்கம் கொடுத்து நம்மளையும் சேர்த்து என்ஜாய் பண்ணவைப்பாங்க...
அண்ணன் கூட போனா திருவிழா முடிஞ்சதும் நேரா வந்து வீட்டுல நம்மளை விட்டுட்டு அவிய்ங்க மட்டும் போயி பார்ப்பாய்ங்க.நம்ம கற்பனை பண்ணிட்டுக் கிடக்க வேண்டியதான்...
அப்பா கூட போனா சீக்கிரமா அவரோட தேங்காப்பூத் துண்டை விரிச்சு நம்மளைத் தூங்கப் போட்டுட்டு பாத்துட்டுருப்பாரு..நம்ம தூங்குறது மாதிரியே நடிச்சுக்கிட்டு அப்பப்ப கண்ணைத் தொறந்துப் பாத்துக்கனும்...
கருத்து: அதை வேற தனியா சொல்லனுமா... இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பாஸ்...