பிஎஃப் தொகை எவ்வளவு 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்
பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal Activation Numcer) உருவாக்கப்பட்டுள்ளது.
அக். 16ம் தேதி முதல் . இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.
இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:
1. இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.
2.அதன் பின் அதனை ஆக்டிவேட் செய்வதற்கான பதிவு செய்தலில் உங்கள் விவரங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனம் அளிக்கும் 12 இலக்க எண்ணையும், உங்கள் செல்போன் நம்பரையும் மற்ற விவரங்களையும் அளித்து அதற்கான உறுதி செய்யும் கோடை அளித்தால் உங்கள் செல்போணிற்கு வரும் குறுங்செய்தியில் உள்ள OTPயை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.
3.பின்னர் உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் கனக்கில் லாக் இன் செய்து ''டவுன்லோடு'' என்ற பக்கத்திற்கு சென்று டவுன்லோட் பாஸ்புக் என்று இருக்கும் அதனை க்ளிக் செய்தால் இந்த மாதம் வரை உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடித்த பி.எஃப் தொகை மொத்தமாக எவ்வளவு உள்ளது. அதில் உங்களது பங்கு என்ன? உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன என்பது தெரிந்துவிடும்.
இதன் மூலம் இனி அந்ததந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உங்கள் கணக்கில் உள்ள தொகையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.