காய்கறியை வாங்கும் போது
காய்கறிகள்ல 'வெண்டைக்காயை' நான் எப்போதும் பரிதாபமாக தான் பார்ப்பேன். மார்க்கெட்டுக்கு அது விற்பனைக்கு வந்ததுக்கப்பறம் அது ம(ா)க்கள் கிட்ட படற பாடு இருக்கே. அப்பப்பா...
வெண்டைக்காயை டெஸ்ட் பண்றேங்கற பேருல அதன் நுனியை உடைச்சு, நகத்தால அமுக்கி, கையால முறிச்சுன்னு வெண்டைக்காயை நாம படுத்தற பாட்டை பார்த்தால் ஆண்டவன் வெண்டைக்காயை படைக்காமலே இருந்துருப்பான்...
இப்படி நைந்து, கசங்கி, நுனி கிள்ளிய வெண்டைக்காய்கள் பார்கக பரிதாபமாய் இருப்பதால் பெரும்பாலும் மக்களால் நிராகரிக்கப்பட்டு , விலை போகாமல் குப்பைகளில் அள்ளி கொட்டப்படுது..
## ஆகவே, மக்களே! இயற்கை கொடுத்த வரம் இந்த காய்கறிகள். அவைகளை பூப்போல கையாளப் பழகுங்கள். "காய்கறிகளை உடைச்சுப் பார்த்து வாங்கனும், கிள்ளிப் பார்த்து வாங்கனும் .அப்போது தான் தரமானன்னு அறியமுடியும்னு காய்கறிகளை ஊனமாக்காதீர்கள்"... (பொதுவாக காய்கறிகளை அமுக்காமல், கிள்ளாமல், நகம் பதிக்காமல் வாங்கப் பழகுங்களேன்.. )