நீ அழகு

உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்
நிற்கும் பொழுதும்
நடக்கும் பொழுதும்
எழும் வரிகளை மறந்து,
வார்த்தைகளை தவற விட்டு
கவி எழுத இயலாமல் தவித்திருக்கிறேன் நான்..

இன்று எனை மறந்த நிலையில் கூட
ஒரு நொடியும் உன்னை நினைத்து விட்டால்,
கொஞ்சும் தமிழும்
என் விரல்களோடு போட்டி போடுகிறது..!!

கவிதைக்கு பொய் அழகு.. ஆனால்
உனக்காய் எழுதும் என் கவிதையில் பொய் இல்லை.. இருந்தும்
அந்த கவிதை அழகாகவே இருக்கிறது! எப்படி..!!??!! அது அப்படித்தான்..!!

அழகை பற்றி எழுதும் கவிதை
அழகாய் தானே இருக்கும்..!!!!

எழுதியவர் : சுதா ஆர் (2-Sep-15, 12:15 pm)
Tanglish : nee alagu
பார்வை : 395

மேலே