எங்கெங்கும் அழகு மயம்

அழகு எங்கே இருக்கிறது!
தேடுகிறோம்; வாழ்நாளில்
தேடிக்கொண்டே இருக்கிறோம்;

நம்மைச்சுற்றி இருக்கும்
பொருள்களில் அழகு இருக்கிறது;

நாம் செய்யும்
செயல்களில் அழகு இருக்கிறது;

நாம் அன்றாடம் பார்க்கும்
மனிதர்களில் அழகு இருக்கிறது;

நம்மைச் சுற்றியுள்ள
உயிரினங்களில் அழகு இருக்கிறது;

அனைத்தும் அழகு மயம்!
அதுவே இன்ப மயம்!

நம் ஒவ்வொருவரும்
பார்க்கும் பார்வையில்தான்
அழகின் ரகசியம் ஒளிந்திருக்கிறது;

அழகு என்பது
இறைவனின் கைவண்ணமே;
எங்கெங்கும் அழகு மயம்!
அதுவே இன்ப மயம்!

எங்கெங்கும் அழகு மயம்!

அழகெங்கே இருக்கிறது!
என்றே வாழ்நாளில்
தேடுகிறோம்; நாம்தேடிக்
கொண்டே யிருக்கிறோம்; 1

நம்மைச்சுற் றியிருக்கும்
பொருள்களிளும், நாம்செய்யும்
செயல்களி ளுமழகு
நிறைந்தே இருக்கிறது; 2

நாமன்றா டம்பார்க்கும்
மனிதர் களில்,நம்மைச்
சுற்றியுள்ள உயிரினங்
களிலழகு இருக்கிறது; 3

அனைத்தும் அழகுமயம்!
அதுவே இன்பமயம்!
நாம்ஒவ் வொருவரும்
பார்க்கும் பார்வையில்; 4

தான்அழகின் ரகசியம்
ஒளிந்திருக் கிறது;
அழகென்ப(து) இறைவனின்
எழில்கை வண்ணமே! 5

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-15, 3:35 pm)
பார்வை : 91

மேலே