இறந்த பின்னும் நீ
என் பள்ளித்தோழன் நீ...
பாதசாரிகளின் பள்ளியறை நீ..
என் கல்லூரிப்பருவ காதலன் நீ...
அன்னை தந்தை அக்கா தம்பி அன்றி
எவர்க்கும் பரிசளித்தது இல்லை என் அன்பு முத்தத்தை...
ஆனால் அனுதினமும் இருமுறையாவது முத்தமிட்டு செல்கிறேன் உன்னை...
என் வீட்டின் ஜன்னல் வழியே கண்ணிமைக்காமல் உன் கம்பீரத்தை நான் ரசித்திருக்கிறேன்..
எப்போதும் உன்னைச்சுற்றி விளையாடும் சிறுவர் கூட்டம்..
உன் ஒற்றை நிழலில் கதைபேசும் ஊர் பெருசுகள்...
உனக்கென ஏதும் இல்லாமல் உன்னிலுள்ள அனைத்தையும் தியாகம் செய்தாய் மற்றவர்களுக்காக....
உண்மேனியில் இருந்து உதிரும் சருகிலிருந்து, காய், கனி, பூ, கிளை வரை பரிசளித்தாய் எங்களுக்காக..
உன்னை மறந்து, உன் தியாகத்தை மறந்து, உன்னை ஓர் ஓரறிவு மரமென்று கருதி வெட்டலாயினர் இம்மானுட பதர்கள்..
என்னுயிரை என் கண்முன்னே துண்டு துண்டாய் வெட்டிசாயத்த பின்னும் உன் கண்ணில் ஓர் பெருமிதம்...
இறந்த பின்னும் நான் உங்களுக்காக என்று....