வெங்காயம் பெருங்காயம் சிலேடை கவிதை

" வெங்காயம் பெருங்காயம் " (சிலேடை கவிதை )
****************************************************************************************

வெங்காயம் பெறும் காயம் பெருங்காயம் மாந்தர்க்கே
பெருங்காயம் சேர்த்துவிட பெறும் காயம் சீர்நிலையே
பெறும் காயம் சீழ் பிடிக்க பெரும் காயம் கடைநிலைக்கே
வெங்காயப் பெரும் காயம் பெறும் காயம் பெருங்காயம் !!
****************

சிலேடை விளக்கம்
-----------------------------------

முதல் வரி : வெங்காயம் எனும் உணவுப்பொருள் (பெறும் காயம் )தட்டுப்பாடு மக்களுக்கு
பெரிய அடி (பெருங்காயம் )

2 வது வரி : பெருங்காயம் எனும் பொருளை உணவில் சேர்த்துவிட நாம் பெற்ற உடல்
(பெறும் காயம் ) சீராக இருக்கும்

3 வது வரி : நாம் அடிபட்டு (பெறும் காயம்)) அடைகின்ற காயமானது சீழ் பிடித்தால்
(பெரும் காயம் ) நமது பெரிய உடல் இறுதிநிலை அடைவதுவே

4 வது வரி : ஒன்றுமில்லாத வெங்காயம் எனும் (பெரும் காயம் )பெரிய காயம் (புண் ஆன
தட்டுபாடுநிலை ) அடையும் நிலை பெருங்காயம் கரைவதுபோலவே ! அந்தநிலை
நீடிக்காது. இது ஒரு தாற்காலிக நிலையே என்பதனை உணர்த்துவதாம்..

நன்றி

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-15, 10:53 pm)
பார்வை : 183

மேலே