என்னவள் 5 ~~ அர்ஷத்

~கூந்தல்
கொடிஏறிய
பூக்கள் -பூவை
அழகில் குளிக்கும் ...!!

~உன்
பாதம்
விட்டுச்சென்ற
சுவடுகளில்
என்
மனம்
பல்லாங்குழியாடும் ...!!

~உடைந்திடாத
கண்ணாடி
வளையல்கள்
உந்தன்
மென்மையை
சொல்லும்...!!

~உடைந்த
கண்ணாடி
வளையல்கள்
எல்லாம்
உன் குழந்தை
தன்மையை சொல்லும்...!!

~நீ
களைந்தெறிந்த
பூக்கள்
தினமும்
காட்சிப்
பொருளாய் மாறும்...!!

~உன்
கூந்தல்
பூக்கள்
உதிர்ந்துவிட்டால்
எந்தன் கையில்
இருக்கும் ..!!

~நீ
தெருவில்
நடந்து
வந்தாலே
கோடி கண்கள்
முளைக்கும்...!!

~நடந்து
வரும் அழகினிலே
பூக்கள் தேனை சுரக்கும்..!!

~நிமிர்ந்து
கொஞ்சம்
பார்த்துவிட்டால்
நாணமழை அடிக்கும் ...!!

~அந்த
மழையில்
நான்
நனையும்
போது
தாவணி
என்னை
அணைக்கும்..!!

~கவிஞன்
மனம்
பார்த்துவிட்டால்
சிந்தை ஆறாய் ஓடும் ..!!

~எச்சில்
பூமியில்
பட்டுவிட்டால்
எறும்பு
கூட்டம் மொய்க்கும் ...!!

~காயப்போட்ட
உன்னாடை தீண்ட
வீசும் காற்று
துடிக்கும் ..!!

~நீ
குடித்து
வைத்த
தேநீர் -தேனை
விடவும் இனிக்கும் ..!!

~உந்தன்
பெயரை
எழுதிய
பின்னால்
பேனா
முனையும்
சுவைக்கும்...!!

~களைந்து
போட்ட
ஆடையில்
தேனீக்கள்
தேனை எடுக்கும்..!!

~உன்னை
பற்றி
கவிதை
சொன்னால்
வெட்கம்
கைகள்
தட்டும்..!!

~நீ
வெட்கப்பட்டு
சிணுங்கும்போது
பரதம்
கதகலி
தோற்கும்..!!

எழுதியவர் : அர்ஷத் (4-Sep-15, 12:20 pm)
பார்வை : 131

மேலே