இதய சிறை

குப்பை தொட்டி குழந்தையாய்
என் காதல்,
குளறி கதறி அலறுதடி
உன் பெயரை..
குனிந்தென்னை எவர் எடுக்க,
குணம் படைத்த உனைத்தவிர..

விவரமாய் விலகி போனாய்,
விரக்தியால் தொலைந்து போனேன்..

குதூகலமாய் என்னுள் நீயடி,
குற்றவாளியாய் உன்னுள் நானடி..

காதல் முளைக்க,
காரணம் விதைத்த,
நட்போ குற்றம்..

கன்னிமார் கூட்டம்,
கண்முன் நடக்க,
கண்ணியமாய் காலம் கடத்துகிறேன்,
-இதுவோ குற்றம்..

குற்றமேயானாலும்,
இருள் சிறை வேண்டாம்,
புழல் சிறை வேண்டாம்,
உன் இதய சிறை போதும்,
இறுதி வரை,
ஆயுள் கைதியாய் இருக்கிறேன்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (4-Sep-15, 12:34 pm)
Tanglish : ithaya sirai
பார்வை : 156

மேலே