பரிணாம மாற்றம்
உன் உதடுகளைத்
----தொட்ட தென்றல்
புன்னகையாய் விரிந்தது !
உன் விழிகளைத்
----தொட்ட தென்றல்
காதலாய் மலர்ந்தது !
உன் விரல்களைத்
----தொட்ட தென்றல்
இசையாய் வடிவெடுத்தது !
உன் கைகளைத்
-----தொட்ட தென்றல்
வலையோசையாய் சிரித்தது !
உன் மேனியைத்
------தழுவிய தென்றல்
ஓவியமாய் உருவெடுத்தது !
உன் மலர்ப்பாதங்களை
-----வருடிய தென்றல்
கவிதையின் மென்மை போற்றியது !
உருவமற்ற தென்றல்
-----உனைத் தொடும்போதெல்லாம்
புதிய புதிய உருவெடுக்கிறது !
உண்மையில் நானும்
-----உன்னைத் தொட்ட போது
பரிணாமம் மாறுதலடைந்தது !
மனிதன் என்பது மாறி
-----கவிஞனாக உருவெடுத்தேன் !
-----கவின் சாரலன்