ஆசிரியர் தினம்
பல்லாயிரம் துறைகளில்
பலர்கோடி கால் பதித்திட ..!
பேருடன் பெருமைதனை
பாரெங்கும் பறைசாற்றிட..!
அறியாமை இருளை நீக்கி
அறிஞனாய் மாற்றிட..!
அக்கறையுடனே
அக்கரை சேர்த்திட..!
வந்தாயோ துரோணராக
கல்வி கலைகள்
கற்று தந்திட..!
அறிவுடனே ஒழுக்கம் புகட்டி சிறந்தவரை
அகத்தில் வாழ்த்தி.!
உனக்கீடில்லை
குருவே போற்றி..!!!