நிழற்படம்

தேவைகளை நிறைவேற்ற,
அடுத்தகட்டங்களை அடைந்துவிட,
காலவெப்பத்தை கடந்துஓட,
கரைந்துவிடாது நிலைத்திருக்க,
வடிவங்கள் உருவங்கள் தோற்றங்கள்,
மாற்றியபடி பயணிக்கிறது மானிடவாழ்வு !!
தனிப்பட்டும் தரைப்பட்டும்,
வேறுபட்டும் மாறுபட்டும்,
புதிய உலகங்கள் காட்டி,
புகுந்துகொண்டாய் எனக்குள் நீ !
நான் நினைத்தேன் !
நிலையானது நீயும் உயிருமென்று !
இனித்தேன் இனிதே,
யானும் மானிடப் பதரன்றோ !
நீ இருப்பாய்,
என் இருப்பாய்,
தேனேடுப்பாய்,
தினம் கொடுப்பாய்,
சேர்ந்திருப்பாய்,
இசை படிப்பாய் என்றெல்லாம்,
பயணப்பட்டேன்,
கடந்தகாலமெனும் முடிந்த பாதையில் !
எத்தனைமுறை,
எவ்வளவு இடிகொடுத்து,
உணர்த்தப்பட்டாலும்,
திருந்தாத பருந்து காதல் மனது !
அது எவ்வளவு ஏமாந்தாலும்,
பறக்கவே செய்கிறது மீண்டும் மீண்டும்,
உன் பார்வைபடும் உயரத்திற்கு !
ஏளனமும் ஏமாற்றமும்,
தவிர்க்க இயலா விசயங்கள் காதலிடை,
அதை தட்டிவிட்டு,
எம்பிப்பறக்க எத்தணிக்கிற மனதே அனேகருக்கு !
பொன்னோ பொருளோ,
பேசிக்களித்த பண்ணோ மறக்கப்படும் !
ஏதாவது ஒரு கங்கையிலோ காவிரியிலோ,
மௌனமாய் கலக்கப்படும்,
பின் செய்கூலி சேதாரமின்றி மறக்கப்படும் !
எனினும்,
உனக்குள் வாழும் மனச்சாட்சி எனும்,
உறங்காத பிடாரிக்கு இவன் உருவே,
நிழற்படம் நிஜப்படம் நினைவு பயணிக்கும் தடம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Sep-15, 9:18 pm)
பார்வை : 105

மேலே