ஏதோ நினைவுகள்

வசந்தத்தின் அணைப்பில்

காதலித்த நாம்

காலதேவனின் நிந்தனையால்

பிரிந்து போய்விட்டோம்.

என் மனைவி,என் குழந்தை

என்ற ஒற்றை தண்டவாளத்தில் நான்,

உன் கணவன் ,உன் குழந்தை

என்ற மற்றொரு தண்டவாளத்தில் நீ,

இணையப் போவதில்லை என்றாலும்

அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது

காதலின் அன்பை தொலைத்துவிட்டு

கடமைக்காக அன்பை சுமந்து கொண்டு

திரியும் மூட்டை தூக்கியாக நான்

எப்பொழுதும் உன்னைப்பற்றிதான்

நினைத்துக் கொண்டிருக்கிறேன் --நீ

என்றைக்காவது என்னை

நினைத்தது உண்டா ?

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (6-Sep-15, 11:12 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 191

மேலே