பாரம்பரியம்

முல்லைக் கொடியே! நீ
அந்தரத்தில் ஆடுவது கண்டு
இந்த மனம் பொறுக்கவில்லை
அடியே! முல்லைக் கொடியிடையே!
நான்
பாரிவள்ளல் பாரம்பரியத்தை சார்ந்தவன்
ஆதலால்....,
என் இதயத் தேரை
உனக்காக விட்டுச்செல்கிறேன்
நீ அதில்
இதமாக படர்ந்து கொள்! அல்லது
இறுகவேனும் பற்றிக்கொள்!

எழுதியவர் : வெ.பசுபதி ரெங்கன் (26-May-11, 12:51 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 374

மேலே