தனித்த பயணம் இனி வேண்டா

இதயம் வருடிய அரக்கி - எந்தன்
இரத்தம் மொத்தம் சுவாசமாய்

பல்லாயிரம் மைல்கள் கடந்தும் - என்னுள்
பத்திய வைத்திய மாத்திரையாய்

விழியது கொஞ்சம் திறந்தால் - நங்கை
விடியலில் வந்தாய் மனதுக்குள்

அத்துணை அயர்வின் ஊடேயும் - அடி
அமிர்தமாய் நெஞ்சம் தித்தித்தாய்

படுக்கை கொஞ்சம் கசக்குதடி - உளம்
பஞ்சில் நெருப்பாய்க் கொதிக்குதடி

ஊடல் கூடல் கலந்ததடி - நம்
ஈருடல் ஓருயிரானதனால்

பூமியிலிவ்வுயிர் வாழுமட்டும் - பிரிவு
பூத்திட நாமும் சம்மதியோம்

தூரம் என்பதை இனி நாமே - தூர
விரட்டி வாழ்ந்திடுவோம்

தனித்த பயணம் இனி வேண்டா - ஒன்றாய்
தரணி எங்கும் வலம் வருவோம்.

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (8-Sep-15, 6:12 am)
பார்வை : 99

மேலே