பிரிந்தவர் கூடினால்
பராசக்தி
குணசேகரனாக
பிரிந்த குடும்பத்தைச் சேர்க்க
சிவாஜி போராடத் தேவையிருந்திருக்காது..
அனாவசியமாக
நம்பியாரின் சூழ்ச்சியில்
மக்கள் திலகம் குடியிருந்தகோவிலில்
அகப்பட அவசியம் வந்திருக்காது...
வாணி ராணியும்
எங்க வீட்டுப் பிள்ளையும்
கழுத்தில் கோர்த்த டாலரின்
புகைப் படத்தை வைத்தோ ..
அம்மா சொல்லித்தந்த
பாடலின் வரிகளை வைத்தோ
ரயில் பிரயாணத்தில் பிரிந்தவர்
ஒன்று சேரும் கிளைமாக்ஸ் காட்சிகளை
ரசிகர்கள் கொண்டாடியிருக்க மாட்டார்கள்..
முகநூலும்
அலைபேசியும்
வலைத் தளங்களும்
அன்று இருந்திருந்தால் ..
நேற்று
முகநூல் மூலம்
முப்பத்தாறு ஆண்டுகளாய்
தொடர்பு அற்றுப் போயிருந்த
மூன்று நண்பர்கள் சேர்ந்தபோது
கிடார் எடுத்து பாடத் தோன்றியது
"யாதோன் கி பாராத்"