முத்தம் பூக்கும் மலர் நீ

முத்தம் பூக்கும் மலரே!
நித்தம் நீயும் பூப்பாயோ?
சத்தமின்றி உதட்டோடு
யுத்தம் நாமும் செய்வோமா?

காதலின்றி வாழ்க்கை இங்கில்லை
வாழ்வில்லில்லா பாடம் ஏதுமில்லை.
காதலின் சொர்க்க கதவை
முத்தச் சாவி கொண்டு திறப்போம் வா.

காதல் பாடும் வானம்பாடியே!
புது உலகைத் தேடிப் பறப்போமா?
மன்மதன் நமக்குத் தேரோட்ட
காதல் தேரில் பயணம் செய்வோம் வா.

மூச்சுக் காற்றில் சுவாசம் ஏந்தி - ஒரே
மூச்சாய் வாழ்வோமா?
தேன் சிந்தும் இதழால் நாமும்
தேனாமிர்தம் உண்போமா?

அன்பு பொழியும் மழையாய் வந்து
என்னை முழுக்க நனைத்தாயே!
விடியும் வரை நிலவாய் வந்து
மனதைத் திருடிச் சென்றாயே!

நேசம் வீசும் பூங்காற்றே! - உன்
குரல் எனக்கு தாலாட்டே!
உன் வாசம் கொண்ட நாள் முதலாய்
சுவாசம் இன்றி நான் வாழ்கிறேன். .....

எழுதியவர் : தங்க மணிகண்டன் (10-Sep-15, 6:03 pm)
பார்வை : 128

மேலே