குற்றம் செய்யாதே தலை குனியாதே

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Sep-15, 8:22 am)
பார்வை : 70

மேலே