இறந்த பாரதி

" இறந்த பாரதி "

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - இருப்பினும்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி...அந்நியனை 1001 ஆவது ஜாதியாய் ஏற்கவேண்டியது தானே பாரதி.

ஓ...நீ இறந்தவனோ...இறந்த மன்னவனோ
மறந்து விட்டேனே..

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை...என்றவனோ

வானம் என்ன இடிந்து விழுகின்ற ஒரு பொருளா !?

வானத்தை ஒரு பொருளாகப் பார்த்த
உன்னை மறந்து விட்டேனே...

ஏனெனில்,

நீ தான் இறந்தவன் ஆயிற்றே .

இறந்த நீ என்று உயிர் பெற்று எழுந்து
பிறந்த என் வன்கேள்விக்கு பதில் பகர்வாய்

காத்திருப்பு...தரையில் நீந்தும் மீனுக்கு ஒப்பு

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Sep-15, 10:10 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : irantha baarathi
பார்வை : 83

மேலே