இன்னும் எத்தனை நாளாகும்
![](https://eluthu.com/images/loading.gif)
கடல் மேல் நடந்து கொண்டு
இருக்கும் காற்று
எழும்போது தென்றலா புயலா
தெரியவில்லை .
உன் நினைவுகளும்
மனதுக்குள் அப்படித்தான்
அடிமனதில் பூட்டு இல்லாத
கதவு போல
அசைந்தாடி தவித்துக் கொண்டு இருக்கிறது
காவல் இல்லாத
காடு போல களவாட
வாய்ப்பு இருந்தும்
யாரும் வரவில்லை
அவள் நினைவுகளை
தூக்கிச் செல்ல !
நிழல்கள் கரைந்து போனாலும்
நிஜங்கள் வாழ்வது போல
அவள் இல்லாத வாழ்வு
ஆணி வேர் இல்லாத
மரமாய் வாழ்கிறது !
பதிவுகளை சுமக்கும்
காற்று அடைத்த
பையைப் போல
காலம் கரைந்து கொண்டு இருக்கிறது
நிலவு இல்லாத
வானத்தைப் போல
நீ வசித்த
உன் எதிர்வீட்டை இன்னும்
எத்தனை நாள்தான்
பார்த்துக் கொண்டு இருப்பது ?