உன்னால் முடியும் படைப்பு-2
இளைஞனே!
இழந்ததை எண்ணி இருட்டில் இருந்தது போதும்
இனி வருவதை வரவேற்க விடியலை நோக்கி வா!
விதியின் சூழ்ச்சியால்
மதுவின் வலையில் சிக்கி மயங்கி நிற்கின்றாயோ?
மானம் போகின்றது மற்ற நாட்டவற்கு மத்தியில்
மனிதனே!
எப்பொழுது உனக்குள் மாற்றம் கொண்டு வருவாய்?
விந்தை விஞ்ஞானி கலாமின் கனவை
நனவாக்க நாட்டம் கொள்!
வைரமுத்துவின் வீர வரிகளைக் கேள்!
நீ
தலைவனாகும் தகுதி தெரிந்தால் தன்னையே மாற்றிக் கொள்!
அன்று நீ நினைத்தால்
இருபது இருபதில் இந்தியா வல்லரசாகும்
உன்னால் முடியும்!!!
-கவிசதிஷ் செல்-9965909897