காதல் சடுகுடு

தவறிப்போன நேசங்களால்
தற்கொலைகள் அதிகரிக்கின்றன
தடுக்கவழியின்றி
தடுமாறி துடிக்கிறது
தந்தை தாயின் மனம்..
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
சரி தானா என்று புரியாமல்
தவறென்று தெரியாமல்
தடம் மாறும் பயணங்கள்
தடுமாறி தடம் புரள்கின்றன..
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
விதிமுறைகளை மீறி
வீதியோரம் அலைகின்ற
காதலரே
கவனியுங்கள்...
💦💦💦💦💦💦💦💦💦
விதியிலும் வலியது காதல்
விதிமுறைகளை கேளுங்கள்!
காதல் இருமனங்களின் ஒன்றிப்பு..
காத்திருந்து கைசேருங்கள்..
💦💦💦💦💦💦💦💦💦
இருவரும் மனம் விட்டு பேசுங்கள்
மரித்தாலும் மறையாது அன்பு
மரணத்தையும் வெல்லும் நிஜம் என்றால்
மதி கொண்டு விதி வெல்லுங்கள்..
💖💖💖💖💖💖💖💖💖
காதல் புனிதமானது
வாழட்டும்
வளரட்டும்
தெய்வீக காதல்...
💖💖💖💖💖💖💖💖💖

எழுதியவர் : Ran Joo (11-Sep-15, 10:34 pm)
Tanglish : kaadhal sadugudu
பார்வை : 149

மேலே