ஆற்று படுகை
சிதறிய துளிகள் எல்லாம் மீண்டும் ஒன்றாய் சேர்ந்து
மேகத்திற்கே திரும்பி கொண்டிருகிறது
அங்கே நின்று காண மனமில்லாது கிளைகளை இழுத்துக் கொண்டு
பூமிக்குள்ளே திரும்பி கொண்டிருக்கிறது மரங்கள்
நிலவு முகம் திருப்பி மறைந்து கொண்டிருக்கிறது
ஆனாலும் வெட்கமின்றி வெட்ட வெளியின் மத்தியில்
தாகத்திற்காய் தாயின் மார்புகளை வெட்டுவது போல
ஆற்று படுகையின் மணலை அள்ளிக் கொண்டிருக்கிறான் மனிதன்...