அன்பே என் ஆருயிரே
![](https://eluthu.com/images/loading.gif)
கண்டேன்! கரைந்தேன்!
உன் கண் எய்தும் அம்பினால்...
திளைத்தேன்! தொலைந்தேன்!
உன் அன்பின் அரவனைப்பில்...
பெற்றேன்! மீண்டும் பிறந்தேன்!
உன் காதல் எனை திண்டியதனால்...
தோற்றேன்! தொலைந்தேன்!
உன்னுள் வீழ்ந்ததினால்
திருமண உறவில் இணைந்தோம்
-அக்கணமே,
எக்கணமும் பிரியாவரம் வேன்டுதடி நெஞ்சம்!!
என் வாழ்வின் விடியலே
உன்னை பார்த்தே எழுந்தேன் தினம்!தினம்!
காதல் கலந்த தேனீர் கொடுத்தாயே
உன் இதழ் ருசித்தால் சீனி தேவையில்லையே!!
உன்னை பார்த்த முதல் கணமே
என்னுயிர் எனதில்லையே!!
அன்பே என் ஆருயிரே...!!