காதல்
நான் கதவோரம் கன்னம் ஒட்டி
உங்களுக்காக
கை அசைத்ததும் இல்லை..
நீங்கள் சமையலறை வந்து
எனை கட்டியணைத்ததும் இல்லை
ஆனாலும்..
என் வாசல் கோலம்
அழியாமல்
விலகிச்செல்லும் உங்கள் மென்மையிலும்..
உங்களுக்காக இளமை சுமக்கும்..
என் பெண்மையிலும்..
நம் காதல் நிறைந்து ததும்புகிறது.!