ஓர் உலகம்
ஓர் உலகம்
அது எங்களுக்காய்
எங்களுக்குமட்டும்..
அங்கு,
புற்களுக்கு பதிலாய் புத்தகங்களும்,
மரங்களுக்கு பதிலாய் காகிதங்களும்,
மலைகளுக்கு பதிலாய் கரிக்கோல்களும்..,
நகரமில்லாத
நகரும் உலகம் அதில்
ஊர்வலம் போகும் எம்கால்கள்
கவிதை பாடியபடி
காதல் சுவைத்துக்கொண்டு
இதழ்கள் சொல் உதிர்க்க
விரல்களின் முத்த உராய்வில்
நகங்கள் சினுங்கி
சிலக் கணங்கள்
சிலிர்த்தும் அதைத் தொடர்ந்து
வியர்த்தும் அடங்கிட..,
இரவும் இரவாய்
நிலவும் நீலப் பெண்ணாய்
என் மடி
தலை சாய்த்து
என் இமை
நேர் நின்று
என் இதழ்
மொழிப் புரிந்து
இன்னும் ஏன்
தாமதம் என்றதே...,
அந்நிமிடம்,
சொட்டொன்று பட்டது
சட்டென்று பெய்யுமோ
பருவம் தப்பிய
மழையும் - அதுவும்.,
அழகாய்.. அவளை
சிலிர்த்திட வைக்குமோ
அதனால் விழுந்தாள்
தாமதமும் தாமதிக்கா
இதழ் மேல்
இருக்கமாய்..,
இன்னும் நெருக்கமாய்..,
நெருக்கம்
நெருப்புக்குமிழ்ப் பொங்க
தடுக்கும் தயக்கத்தில்
நகர்ந்து
நயந்து
ஒரு நொடி பயந்தே,
அடுத்த அடி
விரைந்து
நடந்தபடி நடித்து
நடனமாடி மயக்கி
இலைகள் மறைத்த
சாலையில் புகுந்து
என்னையும்
ஆடச் செய்வாளோ..,
அவளும் அவளாய்
எவளாய் இருப்பாளோ..?
எங்களுக்காய்
எங்களுக்கு மட்டும்
ஓர் உலகம்
அதில்
எங்கள் முதுமை வரை
மேற் சொன்னதாய்
வாழ்ந்திருப்போமோ...?
#கனவு #எதிர்ப்பார்ப்பு #ஓர்உலகம் #யார்அவள்
#எங்கிருப்பாள்
#எழுத்தோலை!