என் காதல் தேவதை
இயந்திரம் என இயங்கிய
மனித ஜடத்திற்கு
மனிதத்தை விதைத்து
வாழ்க்கையை சொல்லி
வாழக் கற்றுக் கொடுத்தவள்
நீயடி...!
பிடிமானமின்றி வழியறியா
நடை பயின்றவனை
நெறிப்படுத்தி
வாழ்க்கை அழகென
உலகைக் காட்டிய
இரண்டாம் தாயவள் நீயடி...!
அவ்வப்போது நான் உளறிடும்
சின்ன சின்ன ஆசைகளையெல்லாம்
தந்து ஆச்சரியப்படுத்திடும்
அதிசய உறவு நீயடி...!
அன்புக்கு ஏங்கி
பாசத்துக்காய் தவிச்சவனுக்கு
எல்லையில்லா அன்பு காட்டி
என்னை கட்டியாளும்
அன்பு இராட்சசி நீயடி...!
வாழ்க்கை முழுதும்
உன் அன்பின் அரவணைப்பில்
வாழ்ந்திட வேண்டும்
இறந்திடும் தருணத்தில்
உன் மடியில்......
உன் முகம் பார்த்து.....
என் உயிர் பிரிந்திட வேண்டும்...!!!