காதல் அறிந்திரா உண்மையின் வெப்பம்

என்றாவது பேசியிருக்கலாம்
நாளை நாம் என்னவாகப் போகிறோம் என்று....
எப்போதாவது யோசித்திருக்கலாம்
உண்மையின் வெப்பம் நம்மை
எப்படிப் பொசுக்குமென்று....
யாரிடமாவது கேட்டிருக்கலாம்
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணங்களை.....
ஒரு இறகின் பயணமாக
இன்று மட்டுமே வாழ்வு
என நினைத்திருந்த என்னிடம்...
வாழ்க்கை முழுவதும் வருவாயா
எனக் கேட்டால் எப்படிச்
சொல்ல முடியும் ?
எனக்குத் தெரியாத
ஒன்றைப் பற்றி.