பிறர் மீது பழி போடாதே
இடிச்சத்தம் காதைக்கிழிக்க,மின்னலொளி கண்ணைப்பறிக்க அடைமழை விடாது பெய்து கொண்டிருந்தது.வெறிச்சோடிக்கிடந்த சாலையில் ஒரு பேரூந்து மட்டும் ஆட்கள் நிரம்பியவாறு சென்று கொண்டிருந்தது.
அதில் பயந்த சுபாவம் கொண்ட அப்பாவி ஒருவனும் உட்கார்ந்திருந்தான்.பேரூந்தில் உள்ளவர்கள் எல்லாம் இந்த இடி பேரூந்தின் மேல் விழுந்து நாம் எல்லோரும் எரிந்து சாம்பல் ஆகப்போகிறோம் என அஞ்சினர்.அப்போது அங்குளள ஒருவன் "இந்த பேரூந்தில் பாவங்கள் செய்தவன் யாரோ இருக்கிறான் அதனால் இடி பேரூந்தின் மேல் விழப்போகிறது அவனால் நாம் எல்லோரும் அழியப்போகிறோம்" என்றான். அதற்கு இன்னொருவன் "அப்படியானால் பேரூந்தை நிறுத்தி விட்டு அதோ தூரத்தில் தெரிகிறதே ஒரு மரம் அதை ஒவ்வொருவராக இறங்கி சென்று தொட்டு விட்டு வருவோம் அப்போது பாவம் செய்தவன் யாரோ அவன் மேல் இடி விழட்டும்.மற்றவர்கள் எல்லாம் தப்பித்து கொள்ளலாம்" என்றான்.அதற்கு எல்லோரும் உடன் பட்டு ஒவ்வொருவராக இறங்க்கிச்சென்று மரத்தை தொட்டு விட்டு வந்து ஏறி "நான் பாவம் செய்யவில்லை" என்று பெருமூச்சு விட்டனர்.கடைசியாக அந்த அப்பாவி மட்டு...ம் பயந்து கொண்டு இறங்கிச்செல்லாமல் உட்கார்ந்திருந்தான்.
எல்லோரும் அவனைப்பார்த்து அப்படியானால் பாவம் செய்தவன் நீயாகத்தான் இருக்க வேண்டும்.உன்னால் நாம் எல்லோரும் உயிரை விட முடியாது.நீயும் இரங்க்கிச்செல் என்றனர்.அதற்கு அவன் நான் போக மாட்டேன் என பயந்தான்.அவனை எல்லோரும் கட்டாயப்படுத்தி இறக்கி விட்டனர்.அவனும் நடுங்கியபடியே சென்று அந்த மரத்தை தொட்டு விட்டு திரும்பினான்.அப்போது பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது.கதறியவாறே கண்ணையும் காதையும் மூடிக்கொண்டான்.சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தான்.அவன் வந்த பேரூந்து எரிந்து கொண்டிருந்தது.
இதில் கிடைத்த நீதி என்னவென்றால் "நம்மில் பலர் பாவங்களை அழுக்கு மூட்டைகளாக சுமந்து கொண்டு அதன் சுமை அறியாது அடுத்தவர்களை பழி சொல்லிக்கொண்டிருகிறோம்" என்பதே.
நன்றி - Keerthy Krish.