மாலை மாற்று

மாகா மாகாமா
மாகா மாகாமா
மாகா மாகாமா
மாகா மாகாமா

பதம்;-
மா,கா மாகாமா
மாஆகா மா,கா மாமா(உமா)
காமா காமா
மாகாமா காமா





பொருள்;-
1. மா,கா மாகாமா
மா -மா மர அடியில் கா-காக்கும்(தவமிருக்கும்), காமா-காமாட்சியே
2.மாஆகா மா,கா மாமா(உமா) – மா ஆகா(து) மா, கா- மா மரமாய் நின்றவனை சூரனை வேல் படையாகி(உமா) பிளந்தாலும் மா ஆகா நீறாகாமல் காத்ததைச்சொல்கிறது
3. காமா காமா -காமனுக்கே அவ்வாற்றலை தந்த காமேஸ்வரியே
4. மாகாமா காமா - மா காமா – மா என்பது இலக்குமியை குறிப்பதாகக் கொண்டால் இலக்குமியே ஆசைப்படும் ஷ்யாமா நீ என்னை காப்பாயம்மா!

பொருள்:- மா மர அடியில் கா-காக்கும்(தவமிருக்கும்), காமா-காமாட்சியே
மா மரமாய் நின்றவனை சூரனை வேல் படையாகி(உமா) பிளந்தாலும் மா ஆகா நீறாகாமல் காத்து வேலும் மயிலுமாய் மாற்றினாய்
காமனுக்கே அவ்வாற்றலை தந்த காமேஸ்வரியே
இலக்குமியே ஆசைப்படும் ஷ்யாமா நீ என்னை காப்பாயம்மா!
என்பதாகும்.
இதில் மா என்பது;இலக்குமி,சரஸ்வதி(ஷ்யமளா-ஷ்யாமா),மா மரம் இப்படி பொருள் படும்
கா என்பது காத்தல், கற்பகக்காடு இப்படி பொருள் படும்


1.இதுஅடி தோறும்வந்த பாடல் முழுவதும் படித்தாலும் வரும் மாலைமாற்று
2.இது மா என்னும் எழுத்தில் தொடங்கி அதே மா என்னும் முடியும் அந்தாதி மடக்கு
3.இதனை கோமூத்திரியாகவும் வரையலாம்
4.இது ஒற்றெழுத்தில்லா பாட்டு
5.இது காஞ்சி காமாட்சி மா அடியில் தவமிருப்பதையும், மா மரமாய் நின்றவனை சூரனை வேல் படையாகி(உமா) பிளந்தாலும் மா ஆகா நீறாகாமல் காத்து வேலும் மயிலுமாய் மாற்றியதை பாடுவதாலும் காதைக்கரப்புமாகும்
மா மலரை வைத்து மாமாயம் செய்பவன் காமனென்றால்
காமனுக்கு மா மலரைத்தரும் மா மரத்தை வைத்திருக்கும் காமாட்சி தானே மாகாமா ?

6.இது நெடில் கொண்டே பாடப்பட்ட நெடுஞ்சீர் வண்ணம்
7.இது ஒரே அடி நான்கு அடிகளாகவும் வரும்படி பாடப்பட்ட ஏகபாதப்பாடல்
8.இது இரண்டே எழுத்துக்களால் பாடப்பட்ட மடக்கும் ஆகும்
இது சித்திர கவிகளுக்குள் பல சித்திரகவிகள் உள்ளதால் இது விசித்திர கவி யாகும்

எழுதியவர் : சு.ஐயப்பன் (15-Sep-15, 8:06 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 116

மேலே