செவ்வாயில் -கார்த்திகா
நீ நான் நிலா
ஒன்று போல்
கிரகங்கள் சுற்றியே
தலை சுற்றல் இவளுக்கு
செவ்வாய்க்கும் புதனுக்கும்
இடைவெளி சரியென்றால்
செவ்வாய் இருக்க தவறேது
நிலவுக்கு விண்மீன்கள்
சொந்தமென்றால்
சூரியன்களை வரமாய் கேட்பதில்
என்ன தவறு
இதோ
இரவின் நீளம்
நீட்டிக்கப் படுகிறது
விடியலை ஒளித்து
புலர்வது என்ன நியாயம்
விடிந்தவுடன் வரும்
மணமகன் எவரும்
மறுக்கப் போவதில்லை
இன்று செவ்வாய்
சரி என்று!